யார் முதலாளி? ... பொறுப்புள்ள மனிதனின் அந்தஸ்து என்ன?

முதலாளித்துவம் தொழிலாளர் உரிமை என்று பலவகையான வாதங்கள் நடந்துகொண்டுதான் உள்ளன.

உண்மையில் முதலாளி என்பவர் யார்? மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவரா? சம்பளம் கொடுப்பவரா? நிதி மற்றும் இதர சலுகைகளை வாங்குபவரா?

இந்த சமுதாயம் பெரும்பாலும் அதிகாரம் பெற்றவர்களை முதலாளியாக பார்க்கிறது? தமக்கு சலுகைகளை கொடுப்பவர்களை 'நல்ல முதலாளி' என்று சொல்கிறது.

பெரும்பான்மையான மக்கள் முதலாளி என்பவர் சகல அதிகாரமும் வல்லமையும் படைத்தவர் என்று நினைக்கிறது. ஆனால் அந்த முதலாளி தன்னுடைய தொழிலுக்கேற்ப தன் வாடிக்கையாளர்களை முதலாளியாக நடத்தவேண்டியுள்ளது. நீண்ட காலமாக உழைத்து உருவாக்கிய தொழில் ஸ்தாபனத்தை காப்பாற்றிக்கொள்ள போராட வேண்டியுள்ளது.

தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைகொடுக்கவேண்டிய பொறுப்பும் உள்ளது. தொழில் போட்டியாளர்களை சமாளிக்கவேண்டிய சிக்கலும் உள்ளது.

இப்போது நாம் 'யார் முதலாளி' என்று மறுசிந்தனை செய்வோம். பணபலமோ அதிகாரபலமோ படைத்தவர்களும் தம்முடைய தொழிலையும் சமுதாய அந்தஸ்தையும் தக்கவைத்துக்கொள்ள போராடவேண்டியுள்ளது.

மன நிறைவோடு வாழும் ஒரு தொழிலாளியை பற்றி சிந்தனை செய்வோமா? எந்த ஒரு பின்புலமோ, அதிகார அல்லது பணபலமோ இல்லாத எளிமையான மனிதர்களை சந்தித்திருக்கிறீர்களா?



யார் முதலாளி? ... பொறுப்புள்ள மனிதனின் அந்தஸ்து என்ன?

எளிய மனிதர்களின் அமைதியான வாழ்க்கைக்கு என்ன காரணம்? தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை திறம்படவும் நேர்மையாகவும் செய்து நிறைவான மனதுடன் வாழ்வதுதான்.

உழைப்பிற்கேற்ற ஊதியம் சிலருக்கு வாய்க்கிறது மற்றும் சிலருக்கு வாய்ப்பதில்லை. சிலநேரங்களில் ஊதியம் பணமாக மட்டுமே கிடைப்பதில்லை அது பலனாகவும் கிடைக்கும். தந்தை தாயின் தொழிலோ வேலையோ பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லையா? (குறிப்பு: இங்கு நான் தந்தையோ தாயோ பணியில் இருக்கும் பொது இறந்தால் பிள்ளைகளுக்கு கிடைக்கும் வேலையை குறிப்பிடவில்லை.)

ஒருவரின் உழைப்பின் ஊதியம் குடும்ப தொழிலை எடுத்து நடத்தும் அடுத்த தலைமுறைக்கு கிடைக்கிறது. பெற்றவர்கள் பெயரும் நிலைத்திருக்கிறது.

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கண்டதுபோல யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாதவரே முதலாளி என்றால், தன் மனசாட்சிக்கு பதில் சொல்ல தேவையில்லாதவரே முதலாளி.

பணபலமும் அதிகார பலமும் அதனதன் மறுபக்கத்தில் மண்டியிட்டு கொண்டுதான் இருக்கின்றன. தேவைகள் அதிகரித்துகொண்டே போனால் பணத்தேவைக்கு முடிவே இல்லை.

மாறாக, அடிப்படை தேவைகளை அளவிட்டு மகிழ்பவர்களுக்கு முதலாளி தன்னை தவிர யாரும் இல்லை.

Comments