எண்ணம் போல் வாழ்க்கை! நேர்மறை எண்ணங்களின் வலிமை!

தலைப்பை பார்தவுடனேயே இப்பதிவின் கருவை கணித்திருப்பீர்கள்! ஆம், எண்ணங்களின்  வலிமையை பற்றி நினைவுகூறப்போகிறோம்.

'நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்' என்றும் 'எண்ணம் போல் வாழ்கை' என்றும் கேட்டிருக்கிறோம். சிலர் இதை உணர்ந்திருக்கவும் கூடும்!

இதை படித்தும் நினைத்தது எல்லாம் நடந்துவிடுமா? மனக்கோட்டை கட்டக்கூடாது என்றெல்லாம் ஒருசாரர் சிந்திப்பீர்கள்.

இந்தப்பதிவு மனக்கோட்டை கட்டுவது பற்றி அன்று, மாறாக நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது பற்றியது.

நமது எண்ணங்கள் வாழ்க்கையோடு தொடர்புடையன. இந்த உலகமே  மாயை வாழவே மாயை என்றாலும் நமது மனம் கொள்ளும் மகிழ்ச்சி உண்மைதானே. எப்படி பட்ட வாழ்வு வாழ்ந்தாலும் கடைசி பயணத்தில் கொண்டுபோவதென்னவோ நம் வாழ்வை பற்றிய நல்ல நினைவுகளை மட்டும்தானே.

நமக்கு என்ன கிடைத்தது என்பதை விட, கிடைத்ததை எப்படி எடுத்துக்கொண்டோம் என்பதே முக்கியம். மன நிறைவு கொண்டவர்க்கு குறைவில்லை. இது ஒருபுறமிருக்க, இனொருபுறம் எண்ணங்கள் மனித வாழ்வை மாற்றியமைக்கின்றன என்றொரு கருதும் உள்ளது.

எண்ணம் போல் வாழ்க்கை! நேர்மறை எண்ணங்களின் வலிமை!
படத்தின் மூலம்https://pixabay.com/photos/woman-thinking-human-person-face-1901702/
ஆம், எண்ணங்கள் நம்மை வடிவமைக்கின்றன. காலம் கூறும் குணங்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பு தான். கோப எண்ணம் கொண்டவர்கள் கோபக்காரர்களாகவும், கருணை எண்ணம் கொண்டவர்கள் அன்பானவர்களாகவும்... மேலும் பல்வேறு வகையில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப சித்தரிக்கப்படுகிறார்கள். எண்ணங்கள் நமது குணத்தை நிர்ணயிக்கின்றன.

நமது திறமைக்கும் இயலாமைக்கும் எண்ணங்களும் காரணமாகின்றன. முடியும் என்ற எண்ணம் கொண்டு விடாமுயற்சி செய்பவர்கள் வெற்றிகாண்கின்றனர். முடியாது என்றெண்ணினால் என்றுமே முடியாது தான்.

உடல் மற்றும் மன வலிமையும் எண்ணங்களை சார்ந்தே இருக்கின்றன. தீவிர நோயிலிருந்து விடுபட்டவர்களும் மற்ற உடல் உபாதைகளில் இருந்து மீண்டவர்களும் நம்பிக்கையான எண்ணங்களை கொண்டவர்கள். நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களை மனநோய் நெருங்குவதில்லை.

நல்ல நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் இன்பமான சுற்றுசுழலும் துக்கநிகழ்ச்சி நடந்த இடங்களை ஒருவெறுமையும் உண்டு.

வழிபாட்டு தளங்களில் நேர்மறை அதிர்வலைகளை உணர்ந்திருப்பீர்கள்.

ஒருநாளில் சிறிது நேரமேனும் ஒதுக்கி நேர்மறை எண்ணங்களை வளர்க்கவேண்டுமென கூறப்படுகிறது. எனது பார்வையில் எண்ணங்கள் நமது வாழ்க்கையோடு இழைந்திருக்கின்றன. இதயம் துடிப்பது போலவும் சுவாசிப்பது போலவும் எண்ணஓட்டங்களும் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன.

மனம் அலைபாய்வதை தடுக்கவும் எண்ணஓட்டங்களை கட்டுப்படுத்துவதும் சாதாரண மனிதர்களுக்கு சிரமமாயிருக்கக்கூடும். ஞானிகளும் யோகிகளும் கற்றுத்தேர்ந்த கலையது.

ஓடும் எண்ணங்களை நேர்மறையானவையாக மாற்றுவது சற்று சுலபமான வேலைதான். நமக்கு நல்லது நாம்தான் நினைக்கவேண்டும்.
தீதும் நன்றும் பிரார்த்தரவாரா. 

நேர்மறை எண்ணங்கள் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும் காலப்போக்கில் நல்ல பலனை கொடுக்கும். நேர்மறை எண்ணங்களை வியத்தகு சக்தியை தெரிந்துகொள்ளுங்கள் (புத்தகம் அமேசானில் விற்பனைக்கு உள்ளது). சற்று முயன்று பாருங்கள், பலனென்னவென்று கூறுங்கள்.

Comments