சொந்தங்கள்
தேவையா இல்லையா? சொந்தங்கள் உதவுகிறார்களா கெடுக்கிறார்களா? இதுபோன்ற கேள்விகளும் வாதங்களும் ஆங்காங்கே எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கான பதில் இன்றுவரை எட்டப்படாத போதிலும், நாம் ஒருபுறம் கூட்டுக்குடும்ப
வாழ்வின் இன்பங்களை இழந்துகொண்டுதான் இருக்கிறோம்.
மனித
உணர்வுகளை உற்றுநோக்கும் போது விளங்குவது என்னவென்றால்
மனிதன் என்றும் தனித்து வாழத்தெரியாதவன், குழுவாக இயங்கும்போதே பலவானாகிறான். இந்த உலகில்வாழும் ஜீவராசிகளிலேயே
அதிகபட்ச வசதிகளை பெற்றிருப்பது மனிதஇனம்தான். இத்தனை வசதிகளும் கண்டுபிடிப்புகளும் அனைவர்க்கும் பயன்படுவது மனித ஒருமைப்பாட்டினால்தான்.
இல்லத்தில்
கூடிவாழாவிட்டாலும் குறைந்தபட்சம் மனதாலாவது கூடியுள்ளோமா என்பது கேள்விக்குரியதுதான். பாட்டி தாத்தா கதைகளும், அத்தை மாமா அறிவுரைகளும், பெரியப்பா
சித்தப்பா கண்டிப்புகளும் காணாமல்போய்விட்டனதான்.
குறைந்துபோன சகிப்பு தன்மையின் மிச்சங்களா இந்த சிதறிய குடும்ப வாழ்க்கை? அனாலும் எதாவது ஒருவகையில் சகித்துக்கொண்டுதானே வாழ்கிறோம், அப்படித்தானே வாழ்ந்தாக வேண்டும், அது தானே நியதி.
👪 கண்முன் இருக்கும் உறவுகளை விடுத்தது கண்ணை கட்டிக்கொண்டு வலைத்தளங்களில் யாரை தேடுகிறோம்? பதில் தெரிந்தால் கூறுங்கள்.
|
குறைந்துபோன சகிப்பு தன்மையின் மிச்சங்களா இந்த சிதறிய குடும்ப வாழ்க்கை? அனாலும் எதாவது ஒருவகையில் சகித்துக்கொண்டுதானே வாழ்கிறோம், அப்படித்தானே வாழ்ந்தாக வேண்டும், அது தானே நியதி.
தன்
அடிப்படைத் தன்மையிலிருந்து மனிதன் மாறமுடியாது. அப்படியொரு மாற்றத்தை இயற்க்கை கோட்பாடுகளும் அனுமதிக்காது.
சிதறிய
குடும்பங்களை மனிதன் எப்படி சேர்க்கிறான்?
சற்று
உற்றுநோக்கும் போது விளங்குவது என்னவென்றே
இன்று நாம் சமூக வலைத்தளங்களிலும்,
fans groupபிலும் குடும்பங்களை சேர்த்துக்கொண்டிருக்கிறோம். நல்லதோ கெட்டதோ முகம்தெரியாத ஒருவரின் அறிவுரைகளை கேட்க விழைகிறோம். இந்த ஊடகங்கள் நல்லதா
கெட்டதா என்பது ஒருபுறம் இருக்கட்டும், இதில் நம் முகமும் எதிரில்
இருப்பவர் முகமும் சரியாக தெரிவதில்லை. ஆனாலும் கூட நாம் ஏன்
வலைத்தளங்களின் வாயிலாக உறவுகளை தேடுவதை விரும்புகிறோம். இதற்கு பின் இருக்கும் உளவியல்
என்ன? கண்முன் இருக்கும் உறவுகளை விடுத்தது கண்ணை கட்டிக்கொண்டு வலைத்தளங்களில் யாரை தேடுகிறோம்? பதில்
தெரிந்தால் கூறுங்கள்.
Comments
Post a Comment